பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் அழும்பில் வேள் 41 வில்லவன்கோதை வீரமொழி செங்குட்டுவன் செப்பிய வீரமொழிகளைக் கேட்ட வில்லவன்கோதை என்னும் படைத்தலைவர், "வேந்தர் வேந்தே! வாழ்க! நூம்மைப் போன்ற வேந்தர்களான சோழ பாண்டியர் நூம்மோடு பகைத்துக் கொங்கர் செங் களத்தே தம் புலிக்கொடியையும் மீனக்கொடியையும் போரில் இழந்து ஓடினர். அச்செய்தி எட்டுத் திசை யானைகளின் செவிவரை சென்று எட்டியது. கொங்க ணர், கலிங்கர், கருநடர், பங்களர், கங்கர், கட்டியர், வடவாரியர் இவருடன் நம் தமிழ்ப்படை கலந்து பொருத போர்க்களத்தில், தாம் யானையை விட்டுப் பகைவரை அழித்த அரிய செயல் இன்னும் எங்கள் கண்களை விட்டு அகலவில்லை. அன்றியும் எம் கோமகளாய் விளங்கிய நும் தாயைக் கங்கையில் தீர்த்த மாட்டி வந்த அந்நாளில் எதிர்த்து வந்த ஆரிய அரசர் ஆயிரவர் முன் தாம் ஒருவராக நின்று பொருத போர்க் கோலத்தைக் கடுங்கட் கூற்றமும் கண் விழித்து நோக் கியவாறே வியந்து நின்றதன்ருே ? கடல் சூழ்ந்த இந் நிலவுலகத்தை வென்று தமிழ் நாடாக்க வேண்டித் தாம் வடநாட்டில் யாத்திரை செய்யக் கருதினுல், ஆங்கு நும்மை எதிர்ப்பவர் எவருமே இல்லை என்பது உறுதி. ஆதலின் வடநாட்டில் வாழும் அரசர்க்கெல் லாம், வில், கயல், புலி இவற்றை முத்திரையாகக் கொண்ட நும் திருமுகத்தை முன்னே விடுத்தருளல் வேண்டும்,' என்று கூறினர். அழும்பில்வேள் அறிவுரை படைத்தலைவராகிய வில்லவன் கோதை சொல் லிய நன்மொழிகளைக் கேட்ட அழும்பில் வேள், நாட்