பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இலக்கிய அமைச்சர்கள் மந்திரத் தலைவராகிய அவர், அரசே! நம் நர்டு நோக்கி வந்த அப் பத்தினிக் கடவுட்குப் படிவம் சமைத் தற்குரிய சிலையைப் பொதிய மலையினின்றேனும் இமய மலையினின்றேனும் எடுத்து வருதலே ஏற்புடைத்தா கும். பொதியத்தினின்று கொணர்வதைக் காவிரியினும் இமயத்தினின்று கொணர்வதைக் கங்கையினும் நீராட் டித் தூய்மை செய்தல் பொருத்தமாகும்," என்று கூறி ர்ை. • ' குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.’ என்ருர் தெய்வப்புலவர். கோப்பெருந்தேவியின் உள் ளக் குறிப்பும், கொற்றவனுகிய செங்குட்டுவன் உள் ளக் குறிப்பும் அவர்கள் முகத்தாலும் கண்களாலும் நுனித் துணர்த்த நுண்ணறிவாளராகிய அழும்பில் வேள் அவர்கள் கருத்திற்கு ஏற்பச் சிறந்த முறையில் தெரிந்துரைத்தார். வேந்தன் வீரவுரை அமைச்சராகிய அழும்பில்வேள் கூறிய மறு மொழியைக் கேட்ட மன்னன், பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரியில் நீராட்டல் வீரம் மிக்க சேரர் குடிப்பிறந்த எங்கட்குச் சிறப்பைத் தரும் செயலன்று. ஆதலின் இமயத்தினின்று கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி வருதலே நம் பெருமைக்குத் தக்கதாகும். வட நாட்டு மன்னர் நம் விருப்பிற்கு இணங்காது தடுப்பா ராயின் இங்கிருந்து வஞ்சிமாலை சூடிய படைகளுடன் புறப்படுவோம். நம் வீரத்தைக் காட்டி வெற்றியுடன் இமயக்கல்லை எடுத்து வருவோம்,' என்று வீரவுரை பகர்ந்தான்.