பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் அழும்பில் வேள் 39 வேண்மாள் விருப்பம் பின்னர்ச் செங்குட்டுவன் தன் அருகில் இருந்த பெருந்தேவியாகிய இளங்கோ வேண்மாளின் உளக் கருத்தை உணர விரும்பினன். ' தேவீ கணவ கிைய பாண்டியனுடன் தன்னுயிரை நீத்த அவன் கோப்பெருந்தேவியும், கணவனை இழந்த கடுந்துயர் பொருது மதுரைமாநகரை எரித்துச் சினத்துடன் நம் நாடு நோக்கி வந்த கண்ணகியும் ஆகிய இருபெரும் பத்தினியருள்ளே வியந்து போற்றும் சிறந்த கற்புடை யார் யார்?' என்று அவளை உசாவின்ை. கணவனது விைைவக் கேட்ட பெருந்தேவியாகிய வேண்மாள் நன்கு ஆய்ந்து மறுமொழி நவின்ருள். காதற் கணவனது துன்பத்தைக் காணுது உயிர்நீத்த பாண்டியன் தேவி-வானுலகில் பெருந்திருப் பெறுவா ளாக ! நம் நாட்டை நோக்கி வந்த பத்தினித் தெய்வ மாகிய கண்ணகியை நாம் வழிபடுதல் கடகுைம்,' என்று அவள் கட்டுரைத்தாள். கணவனுகிய கோவல னுக்கு மதுரைமாநகரில் ஏற்பட்ட கள்வனென்ற பழிச் சொல்லை ஒழித்துத், தனது கற்புத்திறத்தைக் காட்டி, இருவர் புகழையும் நிலைநாட்டிய கண்ணகியே பெண் களிற் சிறந்த பெருமாட்டியாவாள் என்று அப்பெருந் தேவி பேசிள்ை. குறிப்புணர்ந்த அமைச்சர் கோப்பெருந்தேவி தனது கூ ர் த்த மதியால் ஆராய்ந்து கூறிய சொற்களைச் செங்குட்டுவன் செவி யாரக் கேட்டு மகிழ்ந்தான். அவள் கருத்தை ஏற்று அருகில் வீற்றிருந்த அமைச்சர் தலைவராகிய அழும்பில் வேளை நோக்கின்ை. மதிநுட்பம் நூலோடுடைய