பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதியமான் மதியமைச்சர் 47 அருங்கனியைப் பெற்ற அதியமான் தன் அரசவையில் அறிவுரையும் அறவுரையும் வழங்கும் அமைச்சராக அருந்தமிழ் மூதாட்டியார் அமர்ந்திருத்தலைக் கண்டான். இக்கனியினை இவ்வம்மையார் உண்டு பல்லாண்டு பாரில் வாழ்வாராயின் எத்தனையோ உண்மைகளை மக்கள் உய்யுமாறு வழங்குவார். இதனை நாம் உண்டு நெடுநாள் நிலவுலகில் வாழ்ந்தோமாயின் அடுபடை கொண்டு அளவற்ற உயிர்களைப் போரில் கொன்று குவிப்போம். ஆதலின் இதனை ஒளவையாரே அருந்து தல் வேண்டும் என்று மனத்துள் துணிந்தான். உடனே அதனை ஒளவையார் கையில் கொடுத்து உண்ணுமாறு வேண்டினன். பிறர் அன்புடன் அளிக் கும் பொருள் எதுவாயினும் இன்புடன் வாங்கிக் கொள் ளும் இயல்பினராகிய அம்மையார் அதனை இகழாது மகிழ்வுடன் வாங்கி உண்டார். அதனை உண்டபின் அதன் அமுதனைய அரிய சுவையினைக் கண்டார். நல்லமுதனைய இந்நெல்லிக்கனி புதுமையாக அன்ருே இருக்கின்றது என்று வியந்தார். கெல்லிக்கனி யீந்த வள்ளல் அமைச்சராகிய ஒளவையாரின் வியப்பினைக் கண்ட அதியமான் அதன் சிறப்புக்களை விரித்துரைத் தான். " இச் செய்திகளை முன்னரே யான் மொழிந் திருப்பேனுயின் நீவிர் இக்கணியினை அருந்தியிருக்க மாட்டீர் ; நும்மைப் போன்ற நுண்ணறிவாளர் பன் னெடுங்காலம் இப்பாருலகில் வாழவேண்டும் என்னும் பேரார்வத்தாலேயே அதனை உமக்களித்தேன்,' என்று உவகையுடன் உரைத்தான். அதியமானின் அன்புரை களைக் கேட்டு அகமுருகிய தமிழ் மூதாட்டியார் அவனது