பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இலக்கிய அமைச்சர்கள் உயர்ந்த பண்பை உளமாரப் பாராட்டிச் சிறந்ததொரு செந்தமிழ்ப் பாவால் அவனை வாழ்த்தினர். " போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி பால்புரை பிறைநுதல் பொலிங்த சென்னி நீல மணிமிடற்(று) ஒருவன் போல மன்னுக பெரும நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்(து) அருமிசைக் கொண்ட சிறியிலை கெல்லித் திங்கனி குறியாது ஆதல் நின்னகத்(து) அடக்கிச் சாதல் நீங்க எமக்கீத் தனேயே." பகைத்தெழுந்த போரில் எதிர்த்து வந்த மன்னரை வென்று வெற்றிமாலை புனையும் அஞ்சியே! பால் போலும் வெண்மையான பிறைமதியைச் சடைமுடியில் அணிந்துள்ள ஆலமுண்ட நீலகண்டனைப் போல நீ எந்நாளும் மன்னி வாழ்வாயாக! பெரிய மலையின் அரிய பிளவில் தோன்றிய நெல்லி மரத்தில் பல் லாண்டுகளுக்கு ஒரு முறை பழுப்பதாகிய கனியின் சிறப்பினை என்பால் சிறிதும் குறிப்பிடாது மனத்தின் கண் மறைத்தவனுய் யான் இறவாதிருக்குமாறு அரு ளுடன் ஈந்தனையே நினது அன்பை என்னென் பேன்! என்று அவனை வாயார வாழ்த்தி மகிழ்ந்தார். அதியமான் தனது அறிவுசால் அமைச்சராகிய ஒளவையாருக்கு அமுத நெல்லிக்கனி யீந்த அருஞ் செயலைப் பிற புலவர்களும் வியந்து பேசினர். மால் வரைக் கமழ்பூஞ்சர்ரல் கவினிய நெல்லி அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த அதிகன்’ என்று நல்லூர் நத்தத்தனர் என்னும் புலவர் நயந்து போற்றினர். இனிய கனியைப் பற்றிக் கூற வந்த உரையாசிரிய ராகிய பரிமேலழகர், ஒளவையுண்ட நெல்லிக்கனி போல அமிழ்தாவனவற்றை ' என்று பாராட்டினர்.