பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் குலச்சிறையார் 61. என்று நெஞ்சம் பதைத்தனர். பெருமானே! நீவிர் இப்பொழுது மதுரைமா நகருக்கு எழுந்தருளல் இனிய தன்று; நாளும் கோளும் நல்லனவாக இல்லை என்று அன்புடன் சொல்லி அவர் செலவைத் தடுத்தனர். சம்பந்தர் மதுரைக்கு எழுதல் திருநாவுக்கரசரின் அன்பு மொழிகளைக் கேட்டுப் புன்முறுவல் பூத்த சீர்காழிச்செல்வர், “ சிவனர் சேவடி பணியும் நம்மை நாளும் கோளும் நலிய முடியுமோ? எல்லாம் நல்லவாகவே அமையும்," என்று கூறிக் கோளறுபதிகம் பாடியருளினர். பின்னர்த் திருநாவுக் கரசர்பால் விடைபெற்றுத் திருமறைக்காட்டு இறை வனைப் பணிந்து முத்துச் சிவிகையில் ஏறி மதுரைக்குப் புறப்பட்டார். இடையில் உள்ள தலங்கள் பலவற்றை யும் தரிசித்துக் கொண்டே மதுரைமா நகரை அணுகினர். சமணர் திகைப்பும் சம்பந்தர் வரவும் அந்நாளில் மதுரையைச் சூழ்ந்த மலைகளில் வாழ்ந்து வந்த சமணர்கள் தீக்கனவும் தீக்குறியும் கண்டு திகைத்தனர். மங்கையர்க்கரசியாரும் குலச் சிறையாரும் மங்கலக் களுக்களும் மகிழ்வூட்டும் நன் னிமித்தங்களும் கண்டு உவகை கொண்டனர். திருஞான சம்பந்தர் மதுரை நகரத்தின் எல்லையை வந்தடைந்த நற்செய்தியை ஏவலாளர் முன்பே விரைந்து வந்து குலச்சிறையாருக்கு அறிவித்தனர். அது கேட்டு மகிழ் வுற்ற அமைச்சர், அரசியாருக்கு அந் நற்செய்தியினை அறிவித்தார். அவரும் பெருமகிழ்வுற்றுத் திருஞான சம்பந்தரை நகரெல்லையில் எதிர்கொண்டு வணங்கி அழைத்துவருமாறு பணித்தார்.