பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இலக்கிய அமைச்சர்கள் குலச்சிறையார் எதிர்கொள்ளல் அவ்வாறே நகரின் எல்லையை நண்ணிய அமைச் சர், திருஞானசம்பந்தர் அடியார் திருக்கூட்டம் புடை சூழவும், சிவநாம முழக்கம் வானைப் பிளக்கவும் சிவிகை யில் எழுந்தருளும் அரிய காட்சியைக் கண்குளிரக் கண்டு எதிரே விழுந்து வணங்கினர். படிமிசை விழுந்து பணிந்த மதியமைச்சர் எழாதிருத்தலைக் கண்ட அடியவர்கள் சம்பந்தப் பெருமானைச் சார்ந்து செய்தி யைச் சாற்றினர். உடனே அவர் அகமும் முகமும் மலர்ந்தவராய்ச் சிவிகையிலிருந்து விரைந்து கீழிறங்கி ஞர். நிலமிசைத் தொழுது கிடக்கும் அமைச்சர் பக்கம் அடைந்து அவரைத் தம் சிறு மலர்க்கரங்களால் பற் றித் தூக்கலானர். அப்பொழுதே எழுந்து கைகூப்பித் தொழுது நின்ற அமைச்சருக்குச் சம்பந்தர் அருட் பார்வை நல்கினர். சம்பந்தர் நலம் உசாவுதல் - பின்பு, சம்பந்தர் அமைச்சராகிய குலச்சிறை யாரை நோக்கிச், ' சோழர் பெருமான் குலமகளா ராகிய மங்கையர்க்கரசியாருக்கும் திருந்திய சிந்தைப் பெருந்தகவுடையீராகிய நுமக்கும் நம்பெருமான் திரு வருளுக்குக் குறைவில்லையன்ருே ?" என்று அரு ளுடன் நலம் உசாவினர். உடனே குலச்சிறையார் மீண்டும் அவர் திருவடியில் விழுந்து வணங்கி மறு மொழி பகர்ந்தார்." அமைச்சர் மறுமொழி “எங்கள் பெருந்தவத்தின் பயனுய் எழுந்தருளிய பெம்மானே! அடியேங்கள் சென்ற காலத்தில் செய்த