பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் குலச்சிறையார் 65. யாளர். அஞ்செழுத்தோதும் அரிய நாவினை உடை யார். தொண்டர்கள் இறைவன் அருட்குணங்களைக் கூறிக் குலாவுதலைக் கண்டு நாள்தோறும் இன்புறு கின்ற இயல்பினர். இவ்வாறு ஐந்து பாசுரங்களில் குலச்சிறையார் தவப்பணியைச் சம்பந்தர் கூறியருளு, கின்ருர், ஆலவாய் வழிபாடும் அரசியார் வருகையும் இங்ங்னம் திருஞானசம்பந்தரால் பாராட்டப் பெற்ற அமைச்சராகிய குலச்சிறையார் அப்பெருமானை அழைத்துக் கொண்டு ஆலவாய்த் திருக்கோவிலை அடைந்தார். ஆங்கு எழுந்தருளிய ஆலவாய் அண்ண லைக் கண்டு கண்களித்து மண்மிசை வீழ்ந்து வணங்கி ஞர். காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்க நின்று வழி பட்டுப் பதிகம் பாடித் துதித்தார். பின் அங்கயற்கண் னியாரைப் பணிந்து திருவாயிலை அடைந்தார். ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து வரு மாறு அமைச்சரைப் புணித்தனுப்பிய பாண்டிமாதேவி யார் திருக்கோவில் வழிபாட்டிற்குச் செல்வதாக அரசன் பால் விடைபெற்று ஆலவாய்க் கோவிலை அடைந்து திருவாயிலின் ஒருபால் நின்றுகொண்டிருந்தனர். ஞானசம்பந்தர் திருவாயிலை அடைந்த பொழுது, அங் குத் தலைமேல் குவித்த கரங்களுடன் வணங்கி நிற்கும் மங்கையர்க்கரசியாரைக் குலச்சிறையார் அவருக்குக் காட்டினர். அவரைக் கண்டு சம்பந்தர் எதிர் செல்ல அரசியாரும் விரைந்து எதிர்வந்து அவர்தம் மலரடி யில் விழுந்து வணங்கினர். சம்பந்தர் அவரைத் தம் திருக்கரத்தால் எடுத்தருளினர். அப்பொழுது அரசி, யார் தம் கருத்து முற்றியதென மதித்து, மகிழ்ச்சிப் 5-۔.yھے .%