பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இலக்கிய அமைச்சர்கள் ஞானசம்பந்தரைப் பாண்டியன் கண்ட அப்பொழுதே தன் நோய்த் துன்பத்தையும் நோக்காது கைதுக்கிப் பொற்பீடத்தைக் காட்டி அமருமாறு வேண்டினன். பின்னர், மன்னன் இசைவுடன் அவனது வெப்பு நோயை அகற்ற இருதிறத்தாரும் முயன்றனர். ஞான சம்பந்தர் வலப்பக்கத்து நோயைத் தீர்க்கலுற்ருர். சமணர்கள் அவனது இடப்பக்கத்து நோயை அகற்ற லுற்றனர். வேந்தன் வெப்புநோய் தீர்த்தல் திருஞானசம்பந்தர் ஆலவாயண்ணல் திருநீறே மருந்தும் மந்திரமுமாகும் என்று திருவருளைச் சிந்தித்துத் திருநீற்றுப் பதிகம் பாடியவராய்த்தம் திருக் கரத்தால் த்ென்னவன் வலப்பால் உடம்பைத் திருவளர் நீறு கொண்டு தடவினர். அப்பொழுதே அவன் உடம்பின் வலப்பாகம் வெப்பு நோய் நீங்கிக் குளிர்ச்சி யுற்றது. ஆனல் இடப்பாகம் இருபுடை வெப்பும் கூடி வெந்தீப்போல் வேந்தனை வெதுப்பியது. அவனது உடம்பின் ஒருபால் வெம்மையும் மற்ருெருபால் தண் மையும் ஒதுங்கினுல் போன்றிருந்தது. இடப்பால் உற்ற இடரைப் பொறுக்க முடியாத மன்னன், "என்ன வியப்பு! ஒரே காலத்தில் நரகத் துன்பத்தையும் வீட்டின்பத்தையும் காணுகின்றேனே! ஒரே சமயத்தில் கொடிய நஞ்சை உண்பது போன்றும் அரிய அமுதைப் பருகுவது போன்றும் இருக்கின்றதே !' என்று சினத் துடன் கூறினன். சமணர்களை நோக்கி, நீவிர் தோற்றீர்!, என்னை விட்டு அகன்ருெழியுங்கள்' என்று கடிந்துரைத்தான். இடப்பால் வெப்பும் நீங்க இன்னருள் புரிவீர்!" என்று சம்பந்தரைச் சிந்தையால்