பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. அமைச்சர் வாதவூரர் சமயகுரவர் கால்வர் தமிழகத்தின் பழமையான சமயமாகிய சைவத்தை நிலைநாட்டிய தெய்வப் பெருமக்கள் நால்வர். அவர் களைச் சைவ சமயகுரவர்கள் என்று சான்ருேர் போற்று வர். அந்நால்வருள் தேவாரம் பாடிய மூவர்க்கும் காலத்தால் முற்பட்டவர் மாணிக்க வாசகர். விலைமதிக்க முடியாத மணிகளைப் போன்ற அரிய இனிய சொற்களா லாகிய திருவாசகம் என்னும் அருள்நூலைத் தந்தருளிய தல்ை மாணிக்கவாசகர் எனப்பட்டனர். வாதவூரர் வரலாறு கூறும் நூல்கள் இவர் பிறந்த ஊர்பற்றி வாதவூரர் எனவும் படுவர். இவர் மதுரை மன்னனுக்கு மதியமைச்சராய் விளங்கியவர். இவரைத் தன் முதலமைச்சராய்க் கொண்டு அரசியல் நடாத்தும் அரும்பேறு பெற்றவன் அரிமர்த்தன பாண்டியன் என்பான். இவரது அருள் நிறைந்த வரலாற்றை அறிவிக்கும் தமிழ்நூல்கள் பல. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், பரஞ் சோதி முனிவர் பாடிய திருவிளையாடற் புராணம், திரு வுத்தர கோசமங்கைப் புராணம், திருவாதவூரடிகள் புராணம் முதலிய பல நூல்களில் வாதவூரர் வரலாறு விரிவாகப் பேசப்படுகின்றது. எனினும் அவ்வரலாறு எல்லா நூல்களிலும் ஒரே வண்ணமாக உரைக்கப் பெறவில்லை; சிறுசிறு மாற்றத்துடனேயே காணப் பெறுகின்றது.