பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் வாதஆார் 91. பாவை கற்றுக் கொடுக்க வேண்டுமா ?’ என்னும் பழமொழி வழங்குவதாயிற்று. மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் தோன்றி மதுரை மாநகரில் மதியமைச்சராகப் பணிபுரிந்தும் திருவாசகப் பாடல்களில் பெரும்பகுதி தில்லையைப் பற்றியதாக இருத்தலின் தில்லை பாதி திருவாசகத்தில்' என்னும் பழமொழி எழலாயிற்று. திருக்கோவையார் சிறப்பு மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் தனிச் சிறப்புடையதொரு நூலாகும். பாவை பாடிய வாயால் கோவை பாடுக !' என்று தில்லைக் கூத்தப் பெருமானே அன்புடன் வேண்டிக் கொள்ள, மாணிக்க வாசகர் அப் பெருமானையே தலைவராகக் கொண்டு இந் நூலைப் பாடினர். தமிழில் உள்ள பிரபந்த வகைகளுள் ஒன்ருகிய கோவை இலக்கியங்களுள் தலையாயது திருக் கோவையார். இதனைத் திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் கூறுவர். பிற கோவை நூல்களுக்கெல்லாம் தலைவர் பெயரையோ, அவர்தம் நகரப் பெயரையோ அடை மொழியாகச் சேர்த்துக் கூறுவர். திருக்கோவை யாருக்கோ அத்தகைய அட்ை மொழிகள் சேர்க்கப் பெருமல் கோவை என்ற பெயருடன் முன்னும் பின்னும் முறையே திரு என்னும் அடைமொழியும், 'ஆர்' என்னும் விகுதியும் சேர்க்கப் பெற்றுள்ளன. அவை இந்நூலின் தெய்வ நலத்தை விளக்கும் அருமையுடையனவாகும். புலவர் போற்றுதல் சிற்றின்பமும் பேரின்பமும் கலந்து கமழும் தெய்வத் திருநூலாகிய திருக்கோவையார் கற்பவர்