பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இலக்கிய அமைச்சர்கள் சிறப்பு வாய்ந்ததாகும். ' உலகிலுள்ள சமயங்களில் உயர்ந்த உண்மையான சமயம் சைவமே ; தத்துவ சாத்திரங்களில் சைவசித்தாந்தமே. ஏனையவற்றைக் காட்டிலும் பொது நோக்குடையது ; சைவ சித்தாந் தத்தின் தெளிதேளுகிய திருவாசகம் ஐம்பத்தொரு பதிகங்களால் ஆக்கப் பெற்றது ; அது தென்னிந்தி யாவிலுள்ள திருக்கோவில் ஒவ்வொன்றிலும், ஒவ் வொரு தமிழனுடைய உதட்டிலும் உலாவிவரும் உயர் வுடையது ; அது உள்ளத்தை உருக்கும் ஒரு தனிச் செந்நூல்.’ இவ்வாறு கிறித்துவ சமயத்தைப் பரப்ப வந்த பாதிரியார் பாராட்டினர். திருவாசகம் பற்றிய பழமொழிகள் திருவாசகத்தைப் பற்றி வழங்கும் பழமொழிகள் பலவாகும். மனத்தை உருக்கும் தனிச் சிறப்புடையது திருவாசகம். அதற்கு உருகாதார் மனம் இரும்பினும் வலியதாகும். அது பிறிதொன்றற்கும் உருகாது என்று நம் முன்னுேர் உணர்ந்தனர். ஆதலின் திருவாச கத்துக்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்று போற்றிப் பரவினர். திருவாசகத்தில் உயிர்நாடியான பகுதி திருவெம் பாவை என்பது. அது மாணிக்கவாசகரால் திருவண்ணு மலையில் அருளிச் செய்யப்பெற்றது. ஆயினும் மார்கழித் திங்கள் திருவாதிரைத் திருநாளில் தில்லையில் ஒதப்பெறுவது. அதல்ை அங்குள்ள சிறுவர் முதல் அனைவரும் கற்றிருப்பர். ஒதாது உணர்ந்த வித்தையாக அங்குள்ளார் நாவில் பயிலும் நல்லியல்புடையது அதனுல் சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெம்