பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100) திருப்ப திகங்களில் விநாயகரைப் பற்றிய மிகச் சில குறிப்புக்களே காணப்படுகின்றன. ஆகவே, கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தான் நம் நாட்டில் விநாயகர் வணக்கம் தோன்றியிருத்தல் வேண்டுமென்பது தேற்றம்-1 இதுகாறுங் கூறியவாற்றால், நம் தமிழகத்தில் கடைச்சங்ககாலத்தில் விநாயகர் வழிபாடு இருந்திலது என்பதும் கி. பி. 642-ல் சிதுத்தொண்ட நாயனார் மேலைச் சளுக்கியரது தலை நகராகிய வாதாபியிலிருந்து விநாயகரைக் கொண்டுவந்து நம் நாட்டுச் சிவாலயங்கள் சிலவற்றில் எழுந்தருளுவித்தனர் என்பதும் அதுமுதல் விநாயகர் வழிபாடு தமிழ் நாட்டில் பரவிச் சிறப்புற்றது. என்பதும் பிறவும் நன்கு விளங்குதல் காண்க. 1விதாயகரைப் பற்றிய புராணக் கதைகளும் பின்னரே தோன்றியுள்ளன.