பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிற்றுப்பத்தும் பதிகங்களும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழராய்ச்சிட் பகுதியில் விரிவுரையாளராகவுள்ள என்னுடைய அரிய நண்பர், திருவாளர் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்துக்குச் சிறந்த புத்துரை யொன்று எழுதி வந்தார்கள். ஒப்பற்ற சங்க நூற்பயிற்சியும் துண்மான் நுழைபுலனும் ஒருங்கே படைத்துத் தமிழகத்திலுள்ள அறிஞர் பலராலும் பாராட்டப்பெறும் அவர்களது பேரு ரையைக் கையெழுத்துப் பிரதியில் யான் படிக்க நேர்ந்த போது, அவ்வுரை விரைவில் வெளியிடப்பெறின், மிகக் கடினமான பதிற்றுப்பத்தை யாவரும் எளிதில் படித் துணர்ந்து கொள்ளலாம் என்று எண்ணினேன், அதற் கேற்ப, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் செயற்றயேவரும் என்னுடைய நண்பருமாகிய திரு வானர் வ. சுப்பையாப்பின்னை யவர்கள் அத்நூலைப் பிள்ளையவர்களது உரையுடன் வெளியிடும் பணியை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றினார்கள், இந் திலையில் நாடோறும் என்னோடு ஆராய்ச்சித் துறையில் அவைளாவிக் கொண்டும், புதிய புதிய உண்மைகளை