பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

135 ஆராய்ந்துணர்ந்து வெளியிட்டுக்கொண்டும் வரும் என் நண்பர் திரு. பிள்ளையவர்கள் பதிற்றுப்பத்தின் பதிகங் களைப்பற்றி ஒரு கட்டுரை வரைந்து தருமாறு கூறி னார்கள். அதனை யேற்றுக்கொண்ட யான் அடியிற் காணும் கட்டுரையை எழுதியுள்ளேன், சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள தொகை நூல் களுள் பதிற்றுப்பத்தும் புறநானூறும் தனிச் சிறப் புடையாவாகும். அவை பண்டைக் காலத்தில் நம் தமிழகத்தில் நிலவிய முடியுடைத் தமிழ் வேந்தர், குறுநில மன்னர், பிற தலவர்கள், புலவர் பெருமக்கள், நல்லிசைப்புலமை நங்கையர் முதலானோரின் அரிய வரலாறுகளையும் தமிழருடைய பழைய நாகரிக நிலை யினையும் மற்றும் பல உண்மைகளையும் நம்மனோர்க்கு அறிவுறுத்தும் பெருங் கருவூலங்கள் எனலாம். சுருங்கச் சொல்லுமிடத்து, அவை தமிழ் நாட்டின் பழைய வரலாற்று நூல்கள் என்று கூறுவது எவ்வாற்றாலும் பொருந்தும். புறப்பொருளைப் பற்றுக் கோடாகக் கொண்டெழுந்த அவ்விரு நூல்களுள் பதிற்றுப்பத்து எனப்படுவது, சேரமன்னர் பதின்மர்மீது பாடிய ஒரு தொகை நூல். ஒவ்வொரு பத்தும், பத்துப் பாடல்களைத் தன்னகத்துக் கொண்டது. இந்நூலின் முதற்பத்தும் இறுதிப் பத்தும் இக்காலத்தில் கிடைக்காமையின் இதனை இன்ஞர் வேண்ட இன்ன புலவர் தொகுத் தார் என்பது தெரியவில்லை. இதனைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் தாம் ஒவ்வொரு பதிகம் இயற்றிச் சேர்த்திருத்தலை நோக்குங்கால் அவர் சிறந்த புலவராயிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். ஒவ்வொரு பதிகத்திலும் அப் பத்தின் பாட்