பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

143 களுள் தொடித்தலை விழுத்தண்டினர், இரும்பிடர் த் தலையார், கழைதின்யானையார், குப்பைக்கோழியார், அணிலாடுமுன்றிலார், கங்குள் வெள்ளத்தார், கல்பொரு சிறு ங்ரையார், நெடுவெண்ணிலவினார் முதலானோர் குறிப்பிடத்தக்கவராவார். அவர்கள் பாடல்களில் காணப் படும் அருந்தொடர்கள் அன்ஞோரின் இயற்பெயற்களை மறக்கும்படி செய்துவிட்டமை உணரற்பாலதாம். எனவே, பொருள் வளமிக்க அருந் தொடர்களைக் கொண்ட பதிற்றுப்பத்துப் பாடல்களுக்கு அத் தொடர் கணயே பெயர்களாக அமைத்திருப்பது மிகப் பொருத்த முடையதேயாம். ஆனால், பிற்காலத்தில் அல் வழக்கம் மாறிவிட்டது என்பது, சமயச்சார்பில் தோன்றிய பதிகங் களுக்கு அவற்றின் முதலில் அமைந்துள்ள தொடர்களையே பெயர்களாக வழங்கியுள்ளமையால் தெரிகின்றது. பதிற் றுப்பத்தின் நான்காம் பத்து எட்டாம் பத்துக்களின் பதிகங்களில், வோவிக்கோமான் பதுமன் தேவி' என்றும் ஆறாம் பதிகத்தில் 'வேளாவிக்கோமான் தேவி' என்றும் பயின்றுவரும் தொடர்கள் வேளாவிக்கோமன் பதுமன் என்பவனுடைய மகள் எனவே பொருள்படும் என்பது ஈண்டறியத்தக்கதொன்றாகும். சோழ மன்னர்களின் மனைவியருள், பாண்டியன் மகள் தென்னவன் மாதேவி,' பஞ்சவன் மாதேவி எனவும், சோன் மகள் சேரன் மாதேவி மானவன் மாதேவி எனவும் வழங்கப் பெற்றனர் என்பது சோழமன்னர் கல்வெட்டுக்களால் நன்குமாரப்படும். தேவி என்னும் சொல் மனைவியென்ற சிறப்புடைப் பொருளில் வழங்குவதாயினும் இடைக்காலத்தில் அச் சொல் மகள் என்ற பொருளிலும் பெருக வழங்கினமை மேற்காட்டிய பதிற்றுப் பத்துப் பதிகங்களின் தொட