பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

144 ராலும் சோழ மன்னர் கல்வெட்டுக்களாலும் இனிது புலனாகும். இதுகாறும் கூறியவாற்றால் பற்றுப்பத்தின் பதிகங்கள் நம் தமிழகத்தின் வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவனவாகும் என்பதும், அப்பதிகங்களே சோழ மன்னர்கள் தம் கல்வெட்டுக்களிலும் மெய்க் கீர்த்திகள் வரைதற்கு ஓர் ஏதுவாக இருந்திருத்தல் கூடும் என்பதும், சேரமன்னர்கள் தம்மைப் பாடிய புலவர் பெரு மக்களைப் பாராட்டிப் போற்றிய முறைகள் இவை என்பதும், பதிகங்களில் காணப்படுவன உண்மைச் செய்திகனேயாம் என்பதும் அவற்றை உறுதிப்படுத்துவதற்குரிய சான்றுகள் கவ்வெட்டுக்கள் செப்பேடுகள் முதலானவற்றில் இக் காலத்தும் உள்ளன என்பதும் நன்கு விளங்குதல் காண்க.