பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

23 வன்னிநாட்டிய பொன் மௌளி வானவன் மலரின்மே லோன் கன்னிதாள் திருவைச் சேர்த்த கண்ணனும் ஆளுங் காணிச் சென்னிதான் தெரியல் வீரன் தியாகமா விநோதன் தெய்வப் பொன்னி நாட் டுவமை வைப்பப் புலன் கொள நோக்கிப் போனான்.' என்னும் பாடலில் 'தியாகவிநோதன்' என்ற சிறப்புப் பெயரால் ஓர் அரசன் குறிக்கப்பட்டுள்ளனன். இவ் வேந்தன் கி. பி. 1178 முதல் 1218 வரையில் ஆட்சி புரிந்த மூன்றங்குலோத்துங்க சோழனே யாவன் என்று ராவ்சாகிப் திரு. மு. இராகவையங்கார் அவர்களும், அவர்களைப் பின்பற்றி ராவ்சாகிப் திரு. எஸ். வையா புரிப் பிள்ளை அவர்களும் கூறுகின் றனர். அதற்கு அவர்கள் எடுத்துக்காட்டும் சான்றுகள் இரண்டினுள், இம்மன்னன் தியாகவிநோதன் என்ற சிறப்புப்பெய ருடையவனாயிருந்தமையோடு 'வீரக்கொடியொடு தியாகக் கொடி யெடுத்து' ஆட்சி புரிந்தவன் என்றும் இவன் மெய்க்கீர்த்தி இவனைப் புகழ்ந்து கூறுவது ஒன்று; மற்றொன்று 'ஆவின் கொடைச்சகன் -ஆயிரத்து நூசெ ழித்த-தேவின்' என்ற பழம் பாடற்பகுதியால் அறியப் படும் காலக்குறிப்பாகும். இவற்றுள் முன்னையது, எல்லாச் சோழ மன்னர்க்கும் பொதுவான சிறப்புடைச் செயலேயா மென்பது கல்வெட்டுக்களால் அறியுப்படு கின்றது. முதல் இராசாதிராச சோழன் தியாகமே அணியாகக்' கொண்டவன் என்றும், வீர ராசேந்திர 1S. 1. 1., Vol. V, No. 465.