பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்ற பாடலில் அமலன்' என்னும் பரியாய நாமத்தால் ஒரு சோழமன்னனைக் கூறியுள்ளனர் என்று தெரிகிறது. இவ்வேந்தன் யாவன் என்று ஆராயுமிடத்து, சிவஞானி யாகிய கண்டராதித்த சோழர்க்கும் செம்பியன் மாதேவியார்க்கும் புதல்வனாகத் தோன்றிய உத்தம சோழனாக இருத்தல்வேண்டும் என்று துணிதற்கு இடமுளது. உத்தமன் என்ற பெயரையே அமலன் என்னும் பரியாயப் பெயரால் கம்பர் குறித்துள்ளாரா தல்வேண்டும். இவன் கி. பி. 970 முதல் 985வரையில் ஆட்சிபுரிந்த வன். 'ஆவின் கொடைச்சகன்' என்று தொடங்கும் பழம் பாடலில் சொல்லப்பட்டுள்ள சகம் ஆண்டு தொள்ளாயிரம் ஆகும் என்பது முன்னரே விலக்கப்பட் டது. இவ்வாண்டு கி. பி. 978 ஆகும். எனவே, கம்பர் இராமாயணம் பாடிய காலமாக அறியப்படும் கி, பி. 978-ஆம் ஆண்டு உத்தமசோழன் ஆட்சியின் நடுவில் அமைந்திருத்தல் அறியத்தக்கது. ஆகவே, கி. பி, பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பர் இருந்தனர் என்பது தெள்ளிது. தமிழ்த்தாயின் அருந்தவப் புதல்வர்களாய், கவிச்சக்கரவர்த்திகள் என்ற சிறப்புப் பெயருடன் விளங்கியவர்கள், கம்பர், சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், கச்சியப்பமுனிவர் என்ற நால்வருமே பாவர். இவர்களுள் கம்பரே காலத்தால் எல்லோருக்கும் முற்பட்ட கவிச்சக்கரவர்த்தியாவர் என்பது தேற்றம்.