பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நம்பியாண்டார் நம்பி காலம் நம்பியாண்டார் நம்பியென்பார் சிதம்பரத்திற்கு மேற்கேயுள்ள திருநாரையூரிலிருந்த ஓர் ஆதிசைவ அந்தணராவர். இவர் இன மையிற் பொல்லாப்பிள்ளை யாரை வழிபட்டு அருள்பெற்றவர் என்பதும் இராசராச அபயகுலசேகரன் வேண்டிக்கொண்டவாறு சைவசமய குரவர்களும் பிற சிவனடியார்களும் பாடியருளிய பதிகங் கள் எல்லாவற்றையும் தேடிப் பதினொரு திருமுறைகளாக வகுத்துத் தொகுத்தவர் என்பதும் திருமுறை கண்ட புராணத்தால் அறியப்படுகின்றன! , அந்நூலிற் குறிப் பிடப்பெற்ற இராசராச அபயகுலசேகரன் என்பான் முதல் இராசராசசோழனாவன் என்றும் அவ்வேந்தனே தம்பி யாண்டார் நம்பியின் துணைகொண்டு திருமுறைகளைத் தேடிக்கண்டு, பின்னர் அவற்றைத் தொகுப்பித்தவன் என் தும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது பற்றியே அம்மன்னனும் திருமுறைகண்ட சோழன் என்று வழங்கப்படுகின்றனன், தமிழகச் சைவசமய வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இக்கொள்கை 1 திருமுறைகண்டபுராணம், பாடல்கள் 24-29.