பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் முனிவர் அகத்தியர் தமிழ் முனிவராகிய அகத்தியனாரின் படிமங்கள் நம் தமிழகத்தில் கருங்கற் கோயில்களாகவுள்ள சிவன் கோயில்கள் எல்லாவற்றிலும் இருத்தலை இன்றுங் காணலாம். அக் கோயில்களைக் கட்டு வித்த பண்டைத் தமிழ் வேந்தர்கள், அவற்றில் அகத்தியனாரின் படிமங்கள் முற்காலத்திலேயே எழுந் தருளிவித்தமைக்குக் காரணம், இம் முனிவர் பெருமா னுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஏற்பட்டிருந்த தொன்மைத் தொடர்பே எனலாம். அத்துணைத் தொன்மைத் தொடர் புடையவராகிய இவர், வடக்கினின்றும் தெற்கே வந்து நம் தமிழகத்தில் தங்கியிருந்தனர் என்பதுதான் வட நூல்களின் முடிபு. ஆக்கவும் அழிக்கவும் வல்லவராய் முக்காலங்களும் உணர்ந்து நிறைமொழி மாந்தராக நிலவும் இருடிகள் யாண்டும் எளிதிற் போதற்கும் இருத் தற்கும் ஆற்றல் படைத்தவர் ஆவர். எனவே, இவர் வடபுலத்திலிருந்து தென்புலம் வந்திருக்கலாம்; தென் புலத்திலிருந்து வடபுலஞ் சென்று மறுபடியும் தென்புலத் திற்குத் திரும்பியிருக்கலாம்; கடல் கடந்து கீழ்புலஞ் சென்றிருக்கலாம். ஆகவே, இவர் நாடு யாது என்பதைப்