பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

g| நீதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டுபோந்து காடு கெடுத்து நாடாக்கிப் பொதிய லின்கண் இருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து இராக்க தரை ஆண்டு இயங்காமை விலக்கினச் என்பதாம். அகத்தியனாரைப் பற்றித் தமிழ்நாட்டில் தம் காலத்தில் வழங்கிவந்த செய்திகள் சிலவற்றையே ஆசிரியர் நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பியப்பாயிர உரையில் இவ்வாறு குறிப்பிட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, இத், தமிழ் முனிவரைப்பற்றிய செய்திகள் நம் தமிழகத்தில் அந்நாளில் யாண்டும் பரவியிருந்தனவா தல் வேண்டும். ஆசிரியர் நச்சினார்க் கினியர் கூறியுள்ள அகத்தியனார் வரலாற்றில் சிவ பெருமான் திருமணம் சொல்லப்படவில்லை ; எனினும், வட திசையின் தாழ்வு நீங்க இவர் தென்னாடு போந் தமையும் வேறுசில செய்திகளும் அதில் கூறப்பட் டிருத்தல் அறியத்தக்கது. இம் முனிவர் பிரான், தென் றிசை வந்தபோது காவிரியைக் கொணர்ந்தனர் என்றும் சமதக்கினி முனிவர் புதல்வர் திரண தூமாக்கினியாரை அழைத்து வந்தனர் என்றும் புலத்திய முனிவரின் தங்கையார் உ.லோபா முத்திரையாரை அவர் கொடுப்ப மணத்து வந்தனர் என்றும் திருமால் வழியினரான அரசர் பதினெண்மரோடு பதினெண்குடி வேளிரையும் அழைத்து வந்து காடுகளை பழித்து நாடாக்கிப் பொதியிலின் கண் இருந்தனர் என்றும் பிறகு இராவணனை இசையில் வென்று அவனைச் சார்ந்தோர் அப் பக்கங்களில் இயங்கா தவாறு செய்து விட்டனர் என்றும் நச்சினார்க்கினியர் அவ்வுரைப் பகுதியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாம்.