பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

' இறையனார் அகப்பொருளுரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்ற பாண்டிக்கோவைப் பாடல் ஒன்று, உசிதன் என்ற பாண்டி வேந்தன் ஒருவன் அகத்தியர் பால் தமிழிலக்கணம் கேட்டனன் என்று உணர்த்துகின்றது. 'அரை தரு மேகலை யன்னமன்னாயுள் றகத்தியள்வாய் உரை தரு தீந்தமிழ் கேட்டோ னுசிதன்' என்னும் பாடற் பகுதியால் அறியலாம். இனி, வீரபாண்டியன் கல்வெட்டொன்று, பாண்டி மன்னன் ஒருவன் 'திடவாசகக் குறுமுனிபாற் செந்தமிழ் நூல் தெரிந்தருளினான்' என்று கூறுவது குறிப்பிடத்தக்க தாகும். அன்றியும் காளிதாசர் என்ற மாபெருங் கவிஞர், அகத்தியருடைய சிஷ்யன் பாண்டியன் எனத் தம் இரகுவ மிசத்தில் கூறியுள்ளார் என்று தெரிகிறது. இவற்றால் அகத்தியர்க்கும் பாண்டியர்க்குமுள்ள தொடர்பினைத் தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் நன்கு விளக்கி நிற்றல் காண்க. இனி, இம்முனிவர் பிரான் தலைச்சங்கப் புலவருள் ஒரு வராயமர்ந்து தமிழ் ஆராய்ந்தனர் என்று இறையனாகப் பொருளுரை அறிவிக்கின்றது. அவ்வுரையிற் காணப் படும் தலைச்சங்க வரலாறு, 'தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இரீஇயனார் பாண்டியர்கள், அவருள், தலைச்சங்கமிருந்தார் அகத்தி யனாரும், திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும், குன்றெறிந்த முருகவேரும், முரஞ்சியூர் முடிநாகனாரும், நிதியின்