பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

59 திருக்குறளுக்கு உரையும் எழுதிமுடித்து விட்டனர் என்பது இவ்வுரைப்பாயிரத்தால் வெளியா தல் காண்க. இனி, திருக்குறளுக்கு, முற்காலத்தில் பதின்மர் உரைகண்டுள்ளனர் என்பது, 'தருமர் மனக்குடர் தாமத்தர் தச்சர் புரிமே லழகர் பருதி திருமலையர் மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற் கெல்லையுரை செய்தா ரிவர்' என்னும் பழையபாட லொன்றால் அறியப்படுகின்றது. இப்பாடலிற் குறிப்பிடப்பெற்ற புதின் மருன் இளம்பூரண அடிகள் பெயர் காணப்படவில்லை. உரையாசிரிடன்மாருன் மிக முந்தியவராகிய இவ்வடிகள் திருக்குறளுக்கு ஓர் உரையெழுதியிருப்பதை அவ்வெண்பாவைப் பாடியவர் அறிந்திருக்கமாட்டார் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருந்தாது. அன்றியும், திருக்குறளுக்கு உரையெழுதிய அறிஞர் எல்லோரையும் கூறவத்த அப்பெரியார், அன் ஜோருள் இறுதியிலிருந்த பரிமேலழகரைக் கூறிவிட்டு மிகப் பழைய உரையாசிரியராகிய இளம்பூரண அடிகளைக் குறிப்பிடாமற்போகார் என்பது திண்ணம். ஆகவே, அவ்வெண்பா இயற்றப்பெற்ற காலத்தில் திருக்குறளுக்கு இளம்பூரணர் எழுதிய உரை, வேறு பெயரோடு வழங்கி யதாதல் வேண்டும். அங்ஙனமாயின் அவ்வுரை எப்பெய ரோடு வழங்கியிருத்தல் வேண்டும் என்பது ஈண்டு ஆராயற் பால்தாகும். மேலே காட்டப்பெற்ற தொல்காப்பிய இளம்பூரணர் உரைப்பாயிரத்தில் அடிகள், கீழ்கடலைச்சார்ந்த செல்லூரிற் பிறந்தவர் என்பதும், மறையில் வல்ல இளம்போதி என்ப