பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதும் இயல்பேயாம். பிறகு இவர் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய காலத்தில் துறவுபூண்டு சிறப்புற்றிருந் தமையின் இளம்பூரண அடிகள் என்று இயற்பெயராலேயே பாராட்டப் பெற்றிருத்தல் வேண்டும். எனவே, இளம் பூரணர் என்னும் இயற்பெயரும், மணக்குடையார் என்னும் குடிப்பெயரும் ஒருவரையே குறிப்பனவாகும். இனி, சில ஏட்டுப்பிர நிகளில் இவர் பெயர் மணக் குடையார் என்று குறிக்கப்பட்டுள்ளதாம். அன்றியும், திருக்குறளுக்கு உரை கண்ட பதின்மர் பெயர் கூறும் பழைய வெண்பாவிலும் மணக்குடையார் என்றும் பாட பேதம் காணப்படுகிறது. ஆனால், இந்நாளில் மணக் குடவர் என்னும் பெயர் வழங்குகின்றது; எனினும் மணக் குடையார் என்று வழங்குவது தான் பொருத்தமுடையது என்பது உணரற்பாலதாகும். இனி, இளம்பூரண அடிகளது தொல்காப்பிய உரை யையும் மாக்குடையாரது திருக்குறள் உரையையும் கூர்ந்து ஒப்பு நோக்கிப் பார்த்தால் இரண்டுரை நடை களும் ஒத்திருத்தலே யாவரும் எளிதில் அறியலாம். அன்றியும், தொல்காப்பியம்-புறத்திணையியலிலும் திருக் குறளிலும் ஒழுக்கமுடைமை, நடுவு நிலைமை, வெஃகாமை, அழுக்காறாமை என்பவற்றை விளக்கியுள்ள உரை நடைப் பகுதிகள் ஒன்றாகவே அமைந்திருப்பது அறியற்பால தாகும். தீவினையச்சம், கள்ளுண்ணாமை, கொல்லாமை, கள்ளாமை, அருளுடைமை என்பவற்றின் விளக்கவுரை களும் இரண்டிலும் பெரும்பாலும் ஒத்திருப்பதோடு உரை தடைப்போக்கு வேறுபடாமல் ஒன்றாக அமைந்திருப்பதும் உணரத்தக்கது. அவ்வுண்மைகளே அடியிற் காண்க. ,