பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருக்களர்க் கல்வெட் டொன்றிலும் திருச்சிராப்பல்ளி ஜில்லாவிலுள்ள அல்லூர்க் கல்வெட்டொன்றிலும் தேவாரம் என்றசொல் காணப்படுத லால் அவற்றையும் ஆராய்தல் இன்றியமையாததாகும். அக் கல்வெட்டுப்பகுதிகள், "நம்தேவாரத்துக்குத் திருப்பதியம் பாடும் பெரியோன் மறைதேடும் பொருளான அகளங்கப்பிரியனுக்கும்......... வம்சத்தார்க்கும் காணியாக............... செய்யக்கடவன எல்லாம்............ செய்யப்பண்ணி இப்படிக் கல்வெட்டப் பண்ணுசு-இது திருவாய்மொழிந்தருளின திருமூகப்படி!' (திருக்களர்க்கல் வெட்டு) 'உறையூர்க்கூற்றத்து திருவடகுடி மகாதேவர் ஸ்நானமடம் தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்யும் அம்பலத்தாடி திருநாவுக்கரையதுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் நான நிமித்தமாகக் கொடுத்தோம்...... மடபோகமாக நித்தம் தூணிநெல் கொள்ளச்சொன் னோம் ' (அல்லூர்க்கல்வெட்டு) என்பனவாம். இவ் விருகல்வெட்டுக்களிலும் நம் தேவாரத்துக்குத் திருப்பதியம்பாடும் பெரியான் மறைதேடும் பொருளான அகளங்கப்பிரியன்' எனவும் ஸ்தானமடம் தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்யும் அம்பலத்தாடி திரு நாவுக்கரையன்' எனவும் அமைந்துள்ள தொடர்கள் கூர்ந்து நோக்கற்பா லவாகும். அவை அரன்மகாயிலும் கோயிலைச் சார்ந்தமடத்திலும் நடைபெற்றுவந்த நாள் வழிபாடுகளில் திருப்பதிகம்பாடியவர் இருவர் பெயர்களைக் 1. South Indian inscriptions Vol. VIII No. 2600 2. lbid, No. 675