பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும் மணிமயி லுயரிய மாரு வென்றி பிணிமுக வூர்தி வொண்செய் யோறுமென ஞாலங் காக்குங் கால முன்பிற் - சேலா நல்லிசை நால்வர்' என்றுகூறி யுள்ளனர். இதில், சிவபெருமான், பலதேவன், திருமால், முருகவேள் என்னும் நாற்பெருந் தெய்வங்கள் மாத்திரம் குறிக்கப்பெற்றிருத்தல் காண்க. எட்டுத்தொகை நூற் கருள் அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறு நது என்பவற்றிலுள்ள கடவுள் வாழ்த்துப்பாடல்கள் சிவபெருமானைப்பற்றியனவாக உள்ளன. நற்றிணே, குறுந் தொகை என்னும் இரண்டு நூற்களிலுமுள்ள கடவுள் வாழ்த்துக்கள் முறையே திருமாலுக்கும் முருகவேளுக்கும் உரியவாயிருக்கின்றன. எனவே, சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள நூல்களில் விநாயகரைப்பற்றிய குறிப்பு இல்லா திருப்பது அவ்வழிபாடு அந்நாளில் நம்நாட்டில் இருந்திலது என்பதையே வலியுறுத்துவதாகும்.! இனி, விநாயகர் வழிபாடு நம் நாட்டில் எவ்வாறு எக் காலத்தில் தொடங்கப் பெற்றிருத்தல்வேண்டும் என்பது ஆராய்தற்குரியதாகும். விநாயகர் வழிபாடு மிகச் சிறப்பாகத் தொன்று தொட்டு நடைபெற்றுவரும் நாடு மகாராட்டிரதேசம் என்பது யாவரும் அறிந்ததொன்றாம். அங்கிருந்தே அது பதினோராந் திருமுறையிலுள்ள மூத்தநாயனர் திரு வீரட்டை, மணிமாயை, கடைச்சங்கப்புலவராகிய கபிலர் இயற்றியதன்று. அதன் ஆசிரியர் கபிலதேவநாயனார் என்ற பிற்காலப் புலவர் ஆவர்.