பக்கம்:இலக்கிய இன்பம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை


பொ. திருகூடசுந்தரம் எம். ஏ, பி. எல்

நாமக்கல் கவிஞர் அவர்கள் இதுவரை தமிழ் நாட்டார்க்கு உயர்ந்த இலக்கியங்களையே சிருஷ்டி செய்து தந்திருக்கிறார்கள். அவர்களுடைய கவிதைகள் தேசபக்தியும் சுதந்தர ஆர்வமும் நிறைந்துள்ள ஜீவ ஊற்றுகள் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவர்களுடைய “என் கதை“ என்னும் நூல் தமிழ்மொழியில் இதுவரை பிறவாத ஓர் அற்புத இலக்கிய இனமாகும். அவர்களுடைய சிறைவாசத்தில் ஜனித்த “மலைக்கள்ளனை”க் கையில் எடுத்தால் யாரும் இறுதி காணும் வரை கீழே வைக்க மாட்டார்கள்.

இதுவரை இலக்கியங்களைச் செய்து தந்த கவிஞர் அவர்கள், இப்பொழுது இலக்கியத்தில் நாம் காணக்கூடிய இன்பத்தையும் வடித்துத் தர முன்வந்திருக்கிறார்கள்.

இலக்கியம் என்றால் என்ன? அது தரக்கூடிய இன்பம் யாது? நம்முடைய மனத்தில் நிகழும் காரியங்கள், எண்ணங்கள் என்றும் உணர்ச்சிகள் என்னும் இரண்டு வகைப்படும். ஒருவருடைய எண்ணங்களைப் பிறர் மனத்தில் உண்டாக்கும்படி செய்வதற்காக ஏற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_இன்பம்.pdf/3&oldid=1541526" இலிருந்து மீள்விக்கப்பட்டது