பக்கம்:இலக்கிய இன்பம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Iv

பட்ட சாதனங்களை அறிவு நூல்கள் (ஸயன்ஸ்) என்று கூறுவார்கள். அதுபோல் ஒருவருடைய மனத்தில் எழும் உணர்ச்சிகளைப் பிறருடைய மனத்திலும் உண்டாகும்படி செய்வதற்காக ஏற்பட்ட சாதனங்களை இலக்கிய நூல்கள் (கலை) என்று கூறுவார்கள்.

அறிவு நூல்கள் நமக்கு நம்முடைய வாழ்வின் இலட்சியத்தைக் காட்டும்; அதை அடைவதற்கு வேண்டிய சாதனங்களையும் செய்து வரும். இலட்சியம் தெரிந்தாலும் போதாது, சாதனங்களைப் பெற்றாலும் போதாது. இலட்சியத்தை அடைந்து தீர வேண்டும் என்ற அடங்காத ஆர்வம் உண்டானால்தான் இலட்சியத்தை அடைவோம். அத்தகைய ஆர்வத்தை உண்டாக்குவதுதான் இலக்கியத்தின் தனிப்பெரும் நோக்கம். ஆயினும், அதன் அற்புத இலட்சணம் யாதெனில் லட்சியம் இது என்ற அறிவு நூல் கூறுகிறதுபோல் அதைக் குறித்து விவரித்துக் கூறாமலே நம்முடைய மனத்தில் ஆசையை எழுப்புவதேயாகும். இப்படி அறிவு மூலமாக எதையும் கூறாமல் நம்மை உயர்த்துவதனாலேயே இலக்கியத்தை வாழ்வின் ஜீவநாடி என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே, எது உணர்ச்சி ஊட்டுமோ அதுவே இலக்கியம். அதனால் உணர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_இன்பம்.pdf/4&oldid=1541527" இலிருந்து மீள்விக்கப்பட்டது