பக்கம்:இலக்கிய இன்பம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

ஊட்டப்பெறுவதே இலக்கியத்தால் நாம் அடையும் இன்பம். இதுதான் நாம் இலக்கியத்தால் பெறக்கூடிய பிரதான இன்பமும் நன்மையுமாயினும், இந்த இன்பத்தை இலக்கியகர்த்தா எந்தவிதமான சாதனங்களைக் கையாண்டு நம்முடைய மனத்தில் உண்டாக்கும்படி செய்கின்றார் என்பதை அறிவதும் ஒருவித இலக்கிய இனபமாகும்.

இந்தவிதமான இலக்கிய இன்பத்தையே கவிஞர் அவர்கள் இந்த நூலில் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார். இவ்விதம் அறிவு மூலமாக அறியக்கூடிய இலக்கிய இன்பத்தை நமக்குக் கூறுவதற்காக, உலக மகா கவிகளில் ஒருவராகிய கம்பர் பெருமானுடைய இராமாயண காவியத்தையே உபயோகிக்கின்றார்.

“தமிழுக்குக் கதியாவர் இருவர். ‘க’ என்பது கம்பனையும் ‘தி’ என்பது திருவள்ளுவரையும் குறிக்கும்” என்று காலஞ் சென்ற செல்வகேசவராய முதலியார் கூறினார்.

அந்த இருவர் நூல்களிலும் அனவரதமும் திளைத்து வளர்ந்தவர் நம்முடைய நாமக்கல் கவிஞர். அதனாலேயே அவருடைய மலைக் கள்ளனும் பூங்கோதையும் திருக்குறளையும் கம் பராமாணயத்தையும் பெரிதாகப் போற்றுகின்றார்கள். மலைக் கள்ளனுடைய காவலாளிகள் கம்ப ராமாயணத்திலுள்ள விஷயங்களையே தங்கள் சமிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_இன்பம்.pdf/5&oldid=1541529" இலிருந்து மீள்விக்கப்பட்டது