பக்கம்:இலக்கிய இன்பம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

வாசங்களாகக் கூறும் பொழுது நாம ஆசிரியருடைய திறமையையும் அவருக்குக் கம்பனிடமுள்ள அபார பக்தியையும் கண்டு ஆனந்தமும் ஆச்சரியமும் அடைகின்றோம்.

இப்படிக் கவிஞருக்குக் கம்பனிட்த்தில் அளவு கடந்த ஈடுபாடு உண்டாக்கியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனென்றால்,

இம்பர் நாட்டிற் செல்வமெல்லாம்
      எய்தி அரசாண்டிருந்தாலும்
உம்பர் நாட்டில் கற்பகக்கா
     ஓங்கு மீழலில் இருந்தாலும்
செம்பொன் மேரு அனைய புயத்திறல்
     சேர் இராமன் திருக்கதையில்
கம்ப நாடன் கவிதையிற்போற்
     கற்றோர்க்கு இதயம் களியாதே.

புலவர் என்றால் வள்ளுவரையும் கவிஞர் என்றால் கம்பரையுமே எண்ணுபவர் நம்முடைய நாமக்கல் கவிஞர். அவர் “கம்பன் என்ற பெரும்பெயரை நினைக்கும்போதெல்லாம் கவிதை என்ற கன்னிகைதான் வருவாள்.” ஆதலால், அவர் கம்ப ராமாயணத்தில் நாம் பெறக்கூடிய பலவிதமான இன்பங்களை எடுத்து, இந்த நூலில் தமிழ் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் பரிமாறுகின்றார். அஹிம்சா தர்மத்தைக் குறித்துக் கம்பர் பாடியிருப்பதாகக் கவிஞர் அவர்கள் எடுத்துக்காட்டும் இலக்கிய இன்பம் இதயத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_இன்பம்.pdf/6&oldid=1541533" இலிருந்து மீள்விக்கப்பட்டது