பக்கம்:இலக்கிய இன்பம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

துக்கு அமுதம் போல இனிமையாக இருக்கின்றது.

அவர் பரிமாறும் இன்பங்களை இவை என்று முன் கூட்டி உரைப்பது நல்லதுமில்லை; என்னால் சாத்தியமுமில்லை. அத்துடன் அவர் எடுத்துக்காட்டும் முறையே ஒருவித இலக்கிய இன்பம் தருவதாக இருக்கிறது. அதையெல்லாம் நான் அழித்துவிட விரும்பவில்லை. அவரையே, “மெள்ளக் கீறி மெதுவாகச் சுளை எடுத்துத் தேனும் வார்த்து” உங்களுக்கு விருந்து செய்யுமாறு விட்டுவிடுகின்றேன்.

ஆயினும் எனக்கு அவரிடத்தில் ஒருவிதமாகக் கோபமும் உண்டாகிறது என்பதைக் கூறாமல் இருக்க முடியவில்லை. இதுகாறும் இவர் இந்த இன்பங்களை எல்லாம் தனியாகவே நுகர்ந்து வந்திருக்கிறார் என்பதை நினைக்கும்பொழுது என்னைப் போலவே உங்களுக்கும் கோபம் உண்டாகும். இனியேனும் அவர்தாம் கம்பனுடைய இலக்கியப் பூங்காவனத்திலிருந்து பறித்து வைத்திருக்கும் பச்சிலைகளையும் மலர்களையும் நமக்கு அளிப்பார் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை நிறைவேறுமா? என் ஆப்த நண்பர் சின்ன அண்ணாமலை அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். சந்தேகமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_இன்பம்.pdf/7&oldid=1541534" இலிருந்து மீள்விக்கப்பட்டது