பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவர்? எதை? -எப்படி- எப்போது? ஏன்? 35 ஏன் என்ற வினவும் இன்றியமையாதது. காரணம் ஓர் படைப்புக்குப் படைப்போனின் உள் நோக்கும் அப் படைப்போனேயும் படைத்திருக்கும் சமுதாயத்தின் உலக நோக்கும் தாயும் தந்தையுமாய் அமைகின்றன. எனவே இப் படம் : ஏன் ? | கலைஞனின் சமூகத்தின் உள் நோக்கு உலக நோக்கு இதற்கு எடுத்துக் காட்டாக இராம காதையைக் கம்பரும் பாடலாம்; புலவர் குழந்தையும் பாடலாம். ஆனல் இருவர் பாடல்கட்கும் இடையே உள்ள நோக்கு வேறுபாடு விளங்க இக்கட்டுரைக்குத் தலைப்பாக இலங்கும் வின ஐந்துள் முதலும் முடிவுமாய்ப் பயன் பெறத்தக்கன எவர்? ஏன்? என்னும் விளுக்கள். இவ்வினுக்கள் இவ் வகையில் ஒர் இரட்டை. எதை எப்போது? என்பன மற்றும் ஓர் இரட்டை. நடு நாயகமாக விளங்குவது எப்படி என்பதே. இதுவே இலக்கியத் திறனுய்வின் உயிர்காடி. இதை இவ் விளக்கப் படம் இன்னும் விளக்கும். . . . . எப்படி?