பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.aா. ዘ0? தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும் என்று விரும்பினார். தாய்மொழியில் சிந்திக்கும் சிந்தனையே செம்மை உடைத்து ஆதலால் தமிழர்கள் சிந்தனைச் செல்வர்களாக மாற அவர்களுக்குத் தாய் மொழியைக் கட்டாயமாக்கவேண்டும் என்று கருதிய பாவேந்தர், "தமிழ்க் கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய! ஆங்கில நூல் அறிவுக்குச் - சான்றிருந்தால் அதுபோதும் - அலுவல் பார்க்க" என்று முழக்கம் செய்தார். அதன் விளைவு இன்று தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. பள்ளியி லும், கல்லூரியிலும் மட்டும் தமிழ் கட்டாயம் என்று ஆக்கி விட்டால் தமிழ்மொழி வளர்ந்துவிடாது. விளம்பரங் கள், திருமணச்சடங்குகள், உணவு விடுதிகள் போன்ற அனைத்துமே தமிழில் இருத்தல் வேண்டும் என்கின்றார். அவர் அவ்வாறு கூற வேண்டிய நிலை அன்றைய நிலை. அவர் அன்றைய நிலையையும் எடுத்துக்கூறுகின்றார். 'மனக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் கிழலா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை' என்று தணிக்க இயலா துன்பம் கொள்கின்றார். விளம்பரங்கள் முதலானவற்றில் எல்லாம் தமிழ்தான்