பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P.t urr. 127 விட்டது என்று அடுக்களைச் சென்றார். தனித்திருந்த கவிஞர், மனைவியாரின் உடற்குளிர்ச்சி மென்மை, மணம் இவற்றை நுகர நினைவு கொண்டார். மனைவி அங்கு வராமலேயே அது நிறைவேறியது எப்படி? கவிஞரே கூறுகின்றார். - 'தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள் சிலிர்த்திடவே எனை நெருங்கிப் படுத்தாள்போலும் சரியாத குழல் சரியலானாள் போலும் தடவினால் போலும் எனைத் தன்கரத்தால் புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்! புரியட்டும் என இருந்தேன்; எதிரில் ஓர்பெண் பிரிவுக்கு வருக்தினேன் என்றாள் ஒகோ! பேசும்இவள் மனைவி மற்றொருத்தி தென்றல்' இவ்வாறு இவர்தம் கற்பனையில் உயரிய கருத்தும், காதற் சிறப்பும் மிளிர்கின்றன. நகைச்சுவை நகைச்சுனையைப் பற்றித் தாங்கள் என்ன நினைக் கின்றீர்கள் என்று மகாத்மா காந்தியை கேட்டபோது அவர், "ந ைக ச் சு ைவ இல்லையென்றால் நான் எப்பொழுதோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்": என்றாராம். நகைச்சுவை வாழ்க்கைக்கு அந்த அளவிற்கு வேண்டற்பாலது. பாரதிதாசன் நகைச்சுவை விரும்பி. இஃது அவர் பாடலில் வரும் நகைச்சுவை உணர்ச்சியால் அறியலாம். அடர்ந்த காடு, அதில் செழித்து வளர்ந்திருக்கும் ஆலமரம். அதன் கிளையில் ஒரு குரங்கு. அது ஆல விழுது