பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 இலக்கிய ஏந்தல்கள் இவற்றிலிருந்து என்ன தெரிகிறது: மது குடித்து மதி மயங்கித் துன்பங்களை மறந்து சுகம் காணலாமா? ஆம்! அதுதான் செய்யத் தக்கது. பொன் வேண்டாம்; புகழ் வேண்டாம்; பொருள் வேண்டாம்; அதிகாரம் வேண்டாம். தன்னை மறந்து இன்பமுற ஒரு தந்திரத்தைக் கற்றுக், கொள்ள வேண்டும். நாளை என்பது பொய். இந்த நிமிடம் நம்முடையது. வாழ்வு சிறிதுதான்; அந்தச் சிறி தான வாழ்வு நேரத்தையும் பயனற்றும் போக்கி விடாமல், இந்திரிய இன்பங்களை, உடலில் ஆற்றல் இருக்கும் பொழுதே அனுபவித்துத் தீர்த்துவிட வேண்டும்" இவ்வாறு அறிவுறுத்துகிறார் உமார். வாராய் கண்பா, வருத்தமெனும் வாடைக் காலப் போர்வையினை நேரா வருமிவ் வசந்தமெனும் நெருப்பில் வீசி எறிவாயே! தேரா வாழ்வின் பறவைஇனும் செல்லும் தூரம் சிறிதேயாம். பாராய்! பாராய் பறவை அதோ பறக்கச் சிறகும் விரித்ததடா! (9) வாழ்வு பற்றிய இக்கொள்கை மக்களுக்கு உவப்ாகக் கூட இருக்கலாம்; ஆனால் அபாயம் பொருந்திய வாழ்வாகவும் அஃதாகிவிடும் என்பதையும் ஒருவர் மறத்தல் கூடாது. இக்கொள்கை மிருக வாழ்க்கையிற் கொண்டுபோப் விட்டுவிடலாம். எனவே வா ழ்க்கை ஆற்றின் அலை போல் அமைகிறது மீண்டும் மீண்டும் ஒரு சுழலில் அகப்பட்டுக் கொண்டு விழுவதும் எழுவதுமாக வாழ்க்கை இருக்கிறது.