பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置苏数 இலக்கிய ஏந்தல்கள் ஞான காயகா...... மங்களம் பாடி மகிழ்ந்திடத் தருவாய் எங்கும் இருக்கும் எழிலுடைச் சோதி என்றும் இறைமை உணர்வினை, நாட்டுப் பற்றினை வெளிப்படுத்துகின்றார். நாட்டுப் பற்றென்பது, நாட்டின் சுதந்திரம் மட்டுமே அல்லாது. சமுதாய மேம்பாட்டிற்கான நல்லுழைப்பும் ஆகும். கவிஞர்களின் பாடுபொருளாக அமைவது மேற் காணும் எண்ணமாகும். நாமக்கல் கவிஞர் இக்கொள்கை வெளிப்பாட்டில் மிக்க தீவிரம் கொண்டு பாடிய தேசியக் கவிஞர் ஆவார். காந்தியடிகளின் வழிநின்று, தீண்டாமை பற்றி கண்ணன் பாடலில், அரசரின் குலத்தில் பிறந்தாலும் ஆயர்தம் குடிசையில் வளர்ந்தவனாம் ஒருசிறு பேதமும் எண்ணாமல் ஒற்றுமைகாட்டும் கண்ணாளன் என்று பாடுகின் றார். இது போன்றே ‘கடவுள், பரா சக்தி', 'அனைத்தும் நீயே போன்ற பாடல்களிலும் பக்தி உணர்வுடன் நாட்டுப் பற்றினைப் பாடியுள்ளார். மொழிப் பாடலில் அமைவது மனித நாகரிகத்தின் மேம்ாட்டிற்கு அடித்தளமாக அமைவது மொழியாகம். உலகில் உள்ள இரண்டாயிரத் திற்கும் மேற்பட்ட மொழிகளை மொழியியலார் திருந்திய மொழிகள், திருந்தா மொழிகள் என இருவகைப் படுத்துவர். திருந்திய மொழிகள் உயர் தனிச்