உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 193 இன்னும் கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைகளில் உவமை நயம். சொல்லாட்சித் திறன், வடிவச் சிறப்பு முதலான பல அழகுகளையும் ஒருங்கே காணலாம். இனி, கவிஞரின் இரண்டு தனிக் கவிதைகளான புத்தர் பிறந்தார்’ எனுஞ் சிறு காப்பியத்தினையும், கண்ணப்பன் கிளிகள்’ எனும் உருவகக் கவிதையினையும் சுருங்கக் காண்போம். புத்தர் பிறந்தார்' எனுஞ் சிறு காப்பியம் முடிவுபெறாத ஒன்றாயினும், கவிதை நயம் சொட்டும் எழிலார்ந்த கவிதைகள் பல அதில் அடங்கி யுள்ளன. " புத்தர் பிறந்தார்’ என்ற அருமையான காவியம் முடிக்கப்படாமலே குறையாக நின்றுவிட்டது. தமிழிலக்கியத்தின் குறையாகவே ஆகிவிட்டது என்னும் முன்னுரைக் கூற்று" முற்றிலும் உண்மையே! கண்ணப்பன் கிளிகள் 〔 இந்தப் பாடல் புனைந்ததற்குரிய காரணத்தைக் கவிஞரே பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் : "என் கதையில் வரும் கிளிகள் தாமே சிந்தித்துப் பேசக் கூடியவையாக இருக்கின்றன...... - குற்றம் குணமிரண்டும் கூட்டிற் கிளிகளென்று சுற்றம் படருகின்ற தொல்லுலகில்-பெற்றம் பெரிதுண்டுமன்னிக்கும் பேர்க்கென் றறிந்தால் அரிதுண்டோ ஆற்றும் அறம்? -பக் ; 10. மேலே கொண்டுள்ள வெண்பாவை நான் எழுதி முடித்த பிறகு அவ்வுருவகக் கிளிகளை உயிர்க் கிளிகளாகப் படைத்துப் பார்க்கலாமே என்ற எண்ணம் எழுந்தது. பிறகென்ன, அந்தக் கிளிகளைப் பேசவைத்து விட்டேன்!"