பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 இலக்கிய ஏந்தல்கள் எறும்புத் தோலை உரித் துப் பார்க்க யானை வந்ததடா-என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம்வந்ததடா" என்பது ஒரு பெரிய தத்துவத்தின் சுருக்கமான விதை யாகும். கண்ணதாசன் திரை உலகில் நுழையாமல் போய் இருந்தால் இத்தகைய மிகப் பெரிய தத்துவங் களைப் பாமர மனிதன் சந்தித்திருக்க முடியாது. "இமையும் விழியும் எதிரானால் இயற்கை சிரிக்காதோ", "தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?", "அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக்கூடாதோ’ "கண்களில் நீலம் விளைத்தவளோ, அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ' என்பது போன்று புதிய புதிய உவமைகள் பூக்கின்ற மலர்த் தோட்டமாய்க் கண்ணதாசனின் கவிதைகள் நமக்குக் காட்சி தருகின்றன. கண்ணதாசனின் புலமையும் ஆற்றலும் திரைத் துறையோடு நின்றுவிடவில்லை. அவை கவிதை உலகில் கொடிகட்டிப் பறந்தன. அரசியல் துறையில் அவரால் போற்றப்படாத தலைவர்களும் இல்லை; துாற்றப்படாத தலைவர்களும் இல்லை. நேருவை ஒருகால நிலையில் வசைபாடிய கவிஞரே பின்பு நேரு காவியம் பாடியிருக் கிறார். கண்ணதாசனின் கவிதைகளிலேயே தலைசிறந்தது என்று நேருவைப்பற்றிய கவிதையான ஜனநாயக சோசலிசம்’ என்பதனைக் குறிப்பிடலாம். நேருவின் மார்பில் இடம் பிடித்துக்கொண்ட ரோஜாப்பூ வேறு எம்மலரும் பெறாத இடத்தைப் பெற்றுவிட்டதாக உள்ளம் பூரித்ததாம். நேருவை மற்றவர் வணங்கும் போதெல்லாம் தன்னையே வணங்கியதாக ரோஜா க்ளிக்குமாம். இப்போது மன்னவன் மறைந்த துயரில்