பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி பா. 20 & ரோஜா கையற்றுப் புலம்புகிறதாம். இதோ ரோஜா அழுகிறது. "ஊரவர் காட்டோர் உலகோர் யாவரும் பாரதப் பெண்ணையே பார்த்தழு கின்றார்: எனக்கென அழுவேகர் இதயம் இல்லையோ! ஏழைக்குடியில் இழையும் கொடியில் இருந்துவந் தாலும் எங்களுக் கிந்த நாட்டின் பண்புகள் நான்கும் உண்டடி! காதலவர் பிரிந்த கவலை பொறாது கைம்மைநோன் பேற்கும் கற்பும் உண்டடி! இன்று முதலே; எங்கள் குலத்தோர் இன்னொரு மார்பை இணையோம்; கினையோம்!" இந்த மலரின் துயரத்தின்வழி ஒர் அருமையான கையறு நிலைக் கவிதையைக் கண்ணதாசன் படைத்து வழங்கியிருக்கிறார். தன் பெயரன்-தன்னுடைய தாலாட்டுக் கேட்டு உறங்கியவன் எதிர்பாராது இறந்த துயரத்தில் கவிஞர் மனம் குமைந்து பாடிய கையறு நிலையும் மிக உயர்ந்த காவியச் சிறப்பு உடையது. இருபது நூற்றாண்டு இலக்கிய வரலாற்றிலும் இல்லாத ஒரு புதுமையாக கவிஞரின் இந்த இரங்கற்பா விளங்குகிறது. மாறிமாறிக் கொண்டிருந்த அரசியல் போக்குகளுக்குத் தகுந்தாற் போலத் தன்னையும் மாற்றிக்கொண்ட கவிஞரிடம் கால வளர்ச்சியும், சிந்தனையில் ஒரு பரிணாமமும் தென்படக் காணுகின்றோம். கட்சி, அரசியல் கடந்து தகுதிமிக்க பொயவர்களை மதித்துப்போற்றும் பக் கு வ மா ன மனப்பாங்கு அவரிடம் தோன்றிற்று. எல்லோரையும்