பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W.rusf. 23 மனிதரும் உணவு தேடியுண்டு காலனுக்கு உணவா கின்றனர். இதனைப் பாட்டுக்கொரு புலவர் என நாட்டு மக்கள் நலமுற நவிலும் நற்றமிழ்க் கவிஞராம் பrரதியார், தேடிச் சோறு நிதந்தின்று-வெகு சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக வுழன்று-பிறர் வாடப்பல செயல்கள் செய்து-கரை கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் சில வேடிக்கை மனிதரைப் போலே-நானும் வீழ்வேன் என்று கினைத்தாயோ? -பாரதியார் கவிதைகள் என்று கவிதைக் குரலாக்கினார். தேடிச் சோறு நிதந்தின்று கூற்றுக் கீரையெனப் பின் பாயும் மனித குலத்தின் அவலமும் வெள்ளாட்டின் வேதனை மிக்க வரலாறும் ஒரு வகையே என்னும் உண்மையை இரு பெரும் புலவரும் பrடிய நோக்கையுணர்ந்தால் நாம் பாராட்டி வியக்கலாம் செய்யுங் தொழிலே தெய்வம்-அந்தத் திறமைதான் நமது செல்வம் கையுங் காலுக்தான் உதவி-கொண்ட கடமைதான் நமக்குப் பதவி என்னும் பட்டுக்கோட்டையாரின் பாடலடிகள் உழைப் பாளரின் உயரிய வேதமாகின்றது; எளிய திரைக்கீதமா ன்ெறது. "உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்’ என்று பாரதியார் பாடிய செய்தியில் (Dignity of Labour) தொழிலின் கண்ணியம் மட்டும் உணர்த்தப்பட்டது: