பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M ++rr, 233 வருணனைச் சிறப்பு இக்காப்பியம் எளிய இனிய வருணனைகள் பல கொண்டதாக அமைந்துள்ளது. தொடக்கம் முதல் இறுதி அ ஆங்காங்கே நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் அரிய வருணனைகள் இடம் பெற்றிருக்கக் காணலாம். ப| நூலின் உயர் தனிச் சிறப்பாக இவ்வருணனைச் அப்பினைக் கொள்ளலாம். மகிபாலன் பட்டியின் வருணனை மனங்கொளத் தக்கது. அதுவருமாறு : வளரிளங் காடு சூழ்ந்து வனப்பிணிற் பொலிந்து தோன்றும் அளறிடை விளைந்து நிற்கும் அணிவயல் அழகு கூட்டம் களமர்கள் சென்று சென்று கடமைகள் ஆற்றி மீள்வர் குளமெலாம் மீன்கள் துள்ளிக் குதித்திடுங் காட்சி யுண்டு (19) புனல்தரு மணிமுத் தாறு புறத்தினிற் சூழ்ந்து கிற்கும் இனமலர் பூக்குஞ் சோலை எழில்தரும் இயற்கைக் காட்சி மனதில் அமைதி காட்டி மதிவளர் புலமை கூட்டும் கனவுல கொன்று காட்டிக் கவிதையும் படைத்துக் காட்டும் (1:10) பண்டிதமணியின் மணிவிழாவினையொட்டி மகி பாலன்பட்டி அழகு செய்யப் பெறுவதைப் பின்வரும்