பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 இலக்கிய ஏந்தல்கள் பாடல்கள் மிகச் சிறப்பாக வருணனைப் போக்கிற் புலப் படுத்துகின்றன. தெருவிடை மணல்ப ரப்பித் தெள்ளிய நீர்தெளித்தும் அரிசியிற் றிரித்த மாவால் அணிபெறக் கோல மிட்டும் வருபவர் உள்ள மெல்லாம் மகிழ்வினிற் குளிரும் வண்ணம் அரிவையர் கோலஞ் செய்ய அழகினாற் பொலிந்த தவ்வூர் (14:1) புதுக்கிய மனையின் வாயிற் பூம்பொழிற் பந்த ரிட்டார் மதிப்புறங் கமுகு வாழை மரங்களும் குலைகள் தொங்க எதிர்ப்புறங் கட்டு வித்தார் இளந்தளிர்க் குருத்தெடுத்துப் புதுப்புது முறையாற் பின்னிப் பொலிவுற கால விட்டார் (14:2) மாவிலைத் தோர ணங்கள் வயங்குறக் கட்டு வித்தார் பூவினிற் சரங்கள் கட்டிப் புதுமணம் பரவ விட்டார் வாவியிற் பூத்து கிற்கும் மலர்களும் கொணர்ந்து வைத்தார் காவெனக் குளிர்ந்து தோன்றக் கடிநகர் கோலஞ் செய்தார் (14:3)