பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. гит. 339 கண்டு அதைத் தம் காப்பியத்தின் பவ்விடிங்களிலும் பெய்து வைத்துள்ளார். சில காண்போம். திருக்கோயில் பல எழுப்பிச் சிதைவிடத்துத் திருப்பணிகள் எனும்பேரால் திருத்திக்கட்ட வெருக் கொள்ளும் வெயில்நாளில் வேட்கையுடன் வருவார்க்கு விழைந்தெழுந்து தண்ணீர்ப் பக்தல் உருக் கொள்ளு மாறமைக்க, உணவுதரும் அறச்சாலை உண்டாக்கக் குளங்கள் தோண்டப் பெருத்தநிதி எடுத்தெடுத்து வழங்குவது பெருமைஎனப் பேணுவது வணிகர் நாடு (3:1) அண்ணாமலை அரசரை நினைவுகூர்வது போல அமைந்துள்ள பாடல் வருமாறு: வழங்குதலை வழக்காக்கி வாழ்ந்திருந்த வணிகர்சிலர் புதிய அறஞ் செயநினைந்தார் முழங்குதிரைக் கடல்கடந்து முயன்றுபெருஞ் செல்வமெலாம் ஈந்துவக்க முனைந்து வந்தார் எழுங்கலைகள் பலவளருங் கழகங்கள் எழிலறிவுக் கலைக்கோவில் எழுப்பி நின்றார்; பழங்கலைகள் பதிப்பித்தார் தமிழிசைக்குப் பயன்பட்டார் மாறிவருங் காலம் நோக்கி (3:3) பாட்டோட்டம் அமைந்த பாடல் வருமாறு: கணக்கிட்டுச் செட்டோடு வாழுமவர் கல்விக்குக் கணக்கின்றி வழங்கி வந்தார்; பணக்கட்டுப் பாடின்றி வழங்கியதால் பாரிலுளார் வள்ளலென அவரைச் சொன்னார்;