பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜாராம் மோகன்ராய் 'பாரத நாடு பழம்பெரும் காடு; பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே" என்று பாடினார் பாரதியார். பழமையும் சிறப்பும் மிகுந்த இந்தப் பாரத பூமியில் எண்ணற்ற மகான்களும், ஞானி களும், பெரியோர்களும் தோன்றியிருக்கிறார்கள். பல சமயங்கள் நிலவுகின்ற நம் நாட்டில் பல்வேறு காலங்களில் பல சமயச் சான்றோர்கள் தோன்றியுள்ளனர்; அது போன்றே சமயத்தைச் சீர்திருத்த வந்த பெரியோர்களும் தோன்றியிருக்கிறார்கள். இந்தியா பழம் பெரும் நாடான தால் இங்குப் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த பெரியோர் களும், அச்சமூகத்தில் ஏ ற்பட்டுப்போன கேடுகளைப் போக்கி நல்வழி காட்டச் சமூகச் சீர்திருத்தவாதிகளும் அவ்வப்போது தோன்றி வந்து கொண்டே இருக்கின்றனர் இந்தியாவில் வங்காள மாநிலம் அத்தகைய சமயச் சான்றோர்களையும் சமூகப் பெரியோர்களையும் வழிவழி யாகப் பெற்று வருவதாகும். இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற தவஞானிகளை உலகிற்கு அளித்த உன்னத மாநிலம் வங்காளம்தான். அதுபோன்றே இராஜராம் மோகன்ராய், முதலான சமூகப் பெரியார் களையும், தாகூர் போன்ற இலக்கிய மேதைகளையும், பக்கிம் சந்திர சட்டர்ஜி போன்ற நாவலாசிரியர்களையும் நாட்டிற்குத் தந்த மாநிலம் வங்காள மாநிலமேயாகும். பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்