பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்குப் பின் வேலையை விட்டு நீங்கிக் கல்கத்தாவில் ஒரு சிங் கட்டிக்கொண்டு குடியேறினார். அங்குத் தம்முடைய துக்களை இடைவிடாது பிரசங்கம் செய்தார். வம் குறிப்பாக இளைஞரிடையே தம் கருத்துக்களைப் பசப்பினார். தம்முடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அமைப் பின்பற்றிய இளைஞர்களையெல்லாம் ஒன்று சாட்டி. 1815-ஆம் ஆண்டில் மத்திய சபை என்பதை அகமத்தார். ஆனால் இச்சபையின் கருத்துக்களை அங்கே பிராம்மணர்கள் வன்மையாக எதிர்க்கவே நாளடைவில் இச்சபை நலிவடையத் தொடங்கியது. ஆனாலும் இவர் கல்கத்தாவில் வாழ்ந்த பதினைந்து ஆண்டுக் காலத்தில் பல்வேறு துறைகளில் சிறந்த ாதாண்டாற்றினார் எனலாம். தற்காலப் பிரிட்டிஷ் கவி முறை இந்தியர்களுக்குத் தேவை என்று எடுத்துரைத் அா. இந்துப் பெண்கள் ஆண்களுக்குச் சரி சமமாகக் அரு கப்பட்டு அவர்களுக்கு வாரிசு உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார். அக்காலத்தில் கணவன் பிறந்தால் மனைவி வலுக்கட்டாயமாக அேைனாடு புதைக்கவோ அல்லது எரிக்கவோ பட்டாள். அக்கொடிய சடு என்னும் சாகமன முறை தடுக்கப்பட வேண்டும் என்று பாடுபட்டார். இவ்வாறான பல சமய சமூக சீர்திருத்தக் கருத்துக்களை அவர் பேசியும் எழுதியும் வந்தார். தம் கருத்துக்களை விளக்கி நூல்களும் எழுதினார். பிரபல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். அவர் ஆங்கிலம், வங்காளி. பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தம் கருத்துக்களை விளக்கிப் பேசியும் எழுதியும் வந்த காரணத்தால் சமயத்திலும் சமூகத்திலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. பத்திரிகைகளுக்குக் கடிதங் கள் எழுதித் தம் கருத்துக்களுக்கு ஆதரவு திரட்டினார்.