258 இலக்கிய ஏந்தல்கள் இதனால் இவருக்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனவே வீட்டை விட்டே வெளியேற வேண்டிய நிலைமைக்கு உள் ளானார். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட இவர் பல்வேறு இடங்களுக்குச் சென்றார். அங்கு ஆங்கிலம், இலத்தின. ஹீப்ரு, பிரெஞ்சு, கிரேக்கம், வடமொழி முதலிய மொழி களைக் கற்றுத் தேர்ந்தார். காசிக்குச் சென்று இவர் பெற்ற வடமொழிப் பயிற்சி வேத நூல்களின் உட்பொருள்களை அறிந்துகொள்ள உதவியது. பெளத்த மதக் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய காரணத்தால் அச்சமயக் கருத்துக்களை அடங்கிய காலி மொழியினைக் கற்பதற்காகவென்றே திபெத்து நாட்டுக்குச் சென்றார். இவ்வாறு பல இடங்களுக்கும் சென்று பல மொழிகளையும் கற்றுத் தம்முடைய இருபதாவது வயதில் தம்முடைய வீட்டிற்குத் திரும்பினார். இவருடைய தந்தையாரும் உடன் பிறந்தவர்களும் இறந்துவிட்டனர். எனவே இவருக்குப் பொருள் வருவாய்க்கு இடம் ஏற்பட்டது. தமக்குக் கிடைத்த வருவாயில் தாம் பாரசீக மொழியில் எழுதியிருந்த விக்கிரக ஆராதனை மறுப்பு நூலை அச்சிட்டு இலவசமாக வழங்கினார். இதன் பின்னர் வேதங்களிலும் உபநிடதங்களிலும் தாம் நல்லவை, சிறந்தவை, நாட்டுக்குப் பயன் நன்குபவை என்று எண்ணிய பகுதிகளை மொழி பெயர்த்து வெளியிட்டார். இந்த நேரத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் ஒரு வேலை கிடைத்தது. ஒரு மாவட்டத்தில் வரி வசூல் செய்யும் திவான் வேலையை ஏற்றுக்கொண்டார். அவ்வேலையைப் பத்தாண்டுகள் பார்த்தார். பத்தாண்டு.
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/258
Appearance