பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

б,дит. 27 தண்ணீரதனில் தணலெழுங்கால் சாவின் நிழலில் பிறப்பெழுங்கால் மண்ணில் பொன்தரும் தொழிலாளர் மதியில் புவியாள விழியெழாதோ? எனக் கேள்வி தொடுக்கும் பான்மை, அவர் பின்வந்த கவிஞர்க்கும் வழிகாட்டும் வகைபெற்றுச் சிறக்கின்றது. தன்னுணர்ச்சிப்பாவகை பாவினங்களில் லிரிக் (Lyric) தன்னுணர்ச்சிப் பாக்கள் ஒரு வகையாகும். கிரேக்க இலக்கியத்திலும் ஆங்கிலத்திலும் இக்கவிதை வடிவங்கள் சிறந்தன. Lyric என்னும் இசைக்கருவின் இசைத் துணையோடு பாடித் தனிமையில் களிக்கும் பாவகை Lyric ஆயிற்றென அறிஞர் கருதுகின்றனர். இசையுடையது லிரிக்' என்னும் கருத்தோடு குறுகிய அளவினதென்றும் கூறுவதுண்டு. குறுகிய பாக்கள் யாவும் 'லிரிக் வகையைச் சார்ந்தவை என முடிவு கொள்ள இயலாது. ஏனெனில் மற்றொரு செய்தியும் (உள்ளுறை) 'லிரிக் (Lyrical poems) வகையை நிறுவுகின்றது. இசை வடிவாகி நிற்பதோடு பொருளமைதியால் தன்னுணர்ச்சி உள்ளுறையாக வருவது (Lyrical poems) எனப்படும். கவிஞன் யாருடைய தன்னுணர்ச்சியையும் தனது அனுபவமாகப் பாடும் லிரிக் ஒருவகைப்பட்டது. கவிஞன் தன் வாழ்வின் அனுபவத்தையே தன்னுணர்ச்சி வெளி யீடாகவும், இசைப்பாங்குடனும் உருவாக்குவது மற்றொரு வகையாம். தன் வாழ்வினின்றும் முகிழ்த்த பட்டறிவு வெளிப் பாடாக இசைத்த தன்னுணர்ச்சிப் பா வுக் கு ப்