...286 இலக்கிய ஏந்தல்கள் நிலையில்லை என்பது வெள்ளிடைமலை. இயற்கை வாழ்வு அருக அருகக் கடவுள் நெறியெனுஞ் சன்மார்க்கத்துக்கும், மன்பதைக்குமுள்ள தொடர்பும் அறுந்து கொண்டே போகும். அத்தொடர்பிற்கு ஆக்கந்தேட அவ்வப்போது பெரியோர் தோன்றுவது வழக்கம். நமது தமிழ்நாட்டில் இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இராமலிங்க சுவாமிகள் தோன்றிக் காலதேச வர்த்தமானத்துக்கேற்ற முறையில் இயற்கை வாழ்வெனுஞ் சன்மார்க்கத்தை ஒம்பினார். இவ்வாறு சமயத் துறையில் பொதுமை கண்ட திரு.வி.க. அவர்கள் சமுதாயத் துறையிலும் ஒர் அமைதிப் புரட்சியை நடத்திக் காட்டினார். தமிழ்நாட்டில் மட்டு மின்றி ஆசியாவிலேயே முதன்முதலில் வாடியா என்னும் அன்பருடன் சேர்ந்து தொழிலாளர் இயக்கம் கண்டவர் திரு.வி.க. அவர்களே ஆவர், உலகின் உழைக்கும் சக்தியார், உலக மேம்பாட்டிற்கு உழைக்கும் சக்தியாய் வீறுடன் திகழும் தொழிலாளர் விர்க்கம் உழைத்துழைத்துப் பலன் காணாமற் போய் விடுகிறதே என்று எண்ணி அவர்தம் தொல்லைகள் தீர, துயர் மாய ஒர் இயக்கம் கண்டார். அவ்வியக்க மேம்பாட்டிற்கென அல்லும் பகலும் உழைத்தார். தொழிலாளர் தம் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால்தான் நாட்டின் வாழ்க்கை நிலை உயரும் என்று கண்டார். எனவே வீட்டுச் சிறை (House Arrested) அதுவும் அன்னிய ஆட்சியில் மட்டுமன்று; சுதந்திர இந்தியர் ஆட்சியிலும் என்னும் நிலைமையிலும் ஓயாதுழைத்தார். அடுத்து, அவர் எழுதிய வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ்நாட்டின் ஐம்பதாண்டுக் காலச் சரித்திரமாய்த்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/286
Appearance