பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையிலே பிற மொழிக்கு ஏற்றந் தந்தால் மனம் பற்காது; பொறுக்காது; மாறாக மனங் கொதிக்கும். ஒரு முறை வகுப்பில் மொழிநூற் பாடம் நடத்திக்கொண்டு வருகின்றபொழுது அன்றியும் தமிழ்நூற் களவிலை: ஆயின் ஐந்தெழுத்தால் ஒரு பாடையென்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே என்ற இலக்கணக் கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் பாடல் வந்தது. அவ்வளவு தான் சீற்றத்தின் எரிமலையானார் டாக்டர் அவர்கள். தமிழ்நாட்டுச் சோறும் பருப்பும் நெய்யும் தின்றுவிட்டுத் தமிழுக்கு மாறாக, தமிழர்க்கு இழுக்குத் தேடும் வகையில் வாழ்ந்த இவரும் தமிழ்நாட்டில் வாழும் இடம் பெற்றாரே என்று அலமந்தார்கள்; மனம் வருந்தினார்கள் அவர்களின் மொழிப்பற்றுத்தான் என்னே! டாக்டர் அவர்கள் மாணவர்களோடு மனங்கலந்து பேசுவார்கள் அவர்தம் குடும்பக் குறைகளையெல்லாம் கேட்டு ஆறுதல் கூறுவார்கள் இயன்றவரை சொல்லாலும் பொருளாலும் உதவுவார்கள். அவர்கள் உதவியினைப் பெறாத மாணவரே இரார் என்பது திண்ணம். மாணவர் கள் முகத்தைக் கொண்டே அகத்தை அறிவார்கள் ஆவன கூறித் தேற்றுவார்கள். தேர்வுக் காலங்களிலே மாணவர்களைச் சந்திக்க நேர்ந்தால் உடல் நலத்தைக் கண்ணுங் கருத்துமாக ஒம்பவேண்டும் என்று கூறுவார்கள். செம்மை சிறக்க அகத்தும் புறத்தும் என்பதே அவர்களின் விழுமிய கொள்கையாகும். டாக்டர் அவர்கள் வினையே ஆடவர்க்குயிரே என்று. குறுந்தொகைக் கோட்பாட்டின் வழி நின்றவர்கள். ஒரு செயலை எண்ணித் துணிவர்; துணிந்தபின் செயலாற். றாமல் இருக்கமாட்டார்கள்; செய்வன திருந்தச் செய்வார் கள். ஒரு குறிப்பிட்ட செயலை-கடமையைச் செய்து,